மொழி ஒதுக்கல்
ஆங்கிலம் நமது தாய்மொழி இல்லையென்றாலும் அதில் பேசுவதற்கு பெருமை கொள்கிறார்கள். உண்மையான நிகழ்வுகள் மாயையில் நனைவது நமக்கு என்ன புதுசா?. சூத்திர தாரிகளால், வேடதாரிகளால் நாடு ஆளப்படும் போது, இது ஒன்றும் பெரிய விசயமல்ல....
தூதுவன் கொண்டுவந்த செய்தியை விரும்பாமல் தூதுவனையே கொன்றது போல் ஆகிவிட்டது.
ஆங்கிலம் தெரிந்துகொண்டால் மட்டும் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கமுடியம் என்பது வெறும் பிதற்றல். முன்னேறிய மேலை நாடுகள் எல்லாம் தம் நாட்டியில் தன் மொழியிலேயே மென்பொருட்கள், மின்னணு சாதனங்கள் போன்றவற்றை தயார் செய்து தம் மொழியை வளர்க்கிறார்கள். உலக நாடுகளின் அனுபவங்களோடு ஆங்கில ஆதரவாளர்கள் வாதம் தோற்றுவிடுகிறது.
இந்த மொழிவெறி இந்திய சமூதாயத்தையே இரண்டாக பிளந்து விட்டது. சொந்த மொழியின் வேரை மாய்த்து வந்த மொழிக்கு வாழ்வு தந்து சிறுமைபட்ட நாடு உலகிலேயே இந்தியாவாகத்தான் இருக்கும்!...
மொழிவாரியாக புதியதொரு தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது. உள்ளுர் மொழிகளை தீண்டத்தகாததாக ஆக்கி விட்ட இந்தியா- உலகிலேயே புதியதொரு உதாரணம்.