சினிமா 2 ஹோம்

  
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு! அதே போல் வாந்தாரை வரவேற்கும் கோடம்பாக்கம்! பல முதல்வர்களை! பல அமைச்சர்களையும் உருவாக்கியது இந்த கோடம்பாக்கம் தான். இன்னும் சொல்ல போனால் தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றும் வல்லமை உள்ளது இந்த கோடம்பாக்கம். இதன் மறுபக்கம்  யாரும் அறிந்திறாதது.
  இந்த கோடம்பாக்கத்தில் தன்னை நிலை நாட்ட படையெடுத்தோர் பல கோடி. இது தமிழ்நாடு பெயருக்கு மட்டும் தான்!. ஆனால் இங்கு தமிழுக்கும் தமிழனுக்கும் வரவேற்பு எப்பொழுதும் இருந்ததில்லை. நண்பா யோசி!. நம்மில் தமிழ் நடிகர்களின் ரசிகர்கள் எத்தனை பேர்! வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு!
  தமிழனை வாழ விடுவதில்லை. எப்பாடுபட்டாவது ஒரு நல்ல கருத்தை மக்களுக்கு சொல்ல அடி மிதி படும் துணை இயக்குனர்கள் தாங்கள் சொல்லவரும் கருத்தை மக்களிடையே சொல்ல முன்வரும் போது தடையாக இருப்பது 'மாஸ் ஆக்டர்ஸ்' என்று சொல்லப்படும் பிரபலங்கள். மிகப்பெரிய பிரபலங்களின் திரைப்படங்கள் கதைகளே இல்லாமல், கருத்துகளே இல்லாமல் 'பாக்ஸ் ஆபீஸில்' வசூலை அள்ளுகின்றன. ஆனால் நல்ல கதை களத்துடன் வரும் புதுமுக இயக்குனர்களின் ஃ நடிகர்களின் திரைப்படங்களின் நிலை? அந்தோ பரிதாபம். நான் உட்பட நாம் அனைவரும் சினிமாவை ஒரு பொழுது போக்காக கருதுவதில்லை. நம் வாழ்வின் ஒரு அங்கமாகவே கருதுகிறோம்.
 புதுமுகங்கள் ஒரு நல்ல திரைப்படத்தை ஃ நல்ல கருத்தை ஃ நல்ல கதையை நம்மிடையே பரப்ப முற்படும்போது நாம் யாவருமே நிராகரிகிறோம். பிரபல நடிகர்கள் ஃ இயக்குனர்களின் படத்தை திருட்டு விசிடியிலாவது பார்த்து விட துடிக்கிறோம். இதனால் பாதிப்படையும் இயக்குனர்கள் ஃ நடிகர்கள் அதனை சார்ந்தவர்களை பற்றி நாம் நினைப்பதே! இல்லை. நமது மானசிக நாயகன் வெற்றியை மட்டுமே குறியாக கொள்கிறோம். மற்றவர்களின் நிலை...?...? யோசித்திருப்போமா...?...?
 இந்த நிலை மாற நல்ல கருத்துள்ள படங்களை மக்களிடையே கொண்டு சேர்க்க டைரக்டர் நடிகர் சேரன் கையாண்ட புதிய யுக்தியே இந்த சி2எச். இதில் போலியே இல்லை. திறமையுள்ள யாரும் தோற்க வாய்ப்பேயில்லை. மக்களை நேரடியாக சென்றடையும்போது திருடர்களுக்கு இங்கு வேலையில்லை. வலைதளம் உட்பட இல்லங்களின் வரவேற்பறையிலும் பிரவேசிக்கும் பொழுது எது நல்லது? எது கெட்டது எது? என நம்மால் பிரித்து பாக்கவும் முடியும்.
  சி2எச் இதன் மூலம் நாம் வீட்டிலிருந்தே குடும்பத்துடன் சிறந்த புதிய சினிமாக்களை கண்டு களிக்களாம்.
  இந்த முயற்சி வியாபார நோக்கத்துடன் தொடங்கப்பட்டதல்ல. நல்ல கருத்துகளை அடங்கிய, மக்களின் வாழ்க்கை முறைக்கு பயன்படக்கூடிய, மக்களின் வசதிக்கேற்ப, குறைந்த செலவில் வீடு தோறும் கொண்டுச் சேர்க்கக்கூடிய நிறுவனம்.
  இதன் மூலம் நல்ல கருத்துள் திரைப்படங்களை தாயரிக்கும் ஒரு தயாரிப்பாளர் தனது முதலீட்டை திரும்பபெறவும், ஓர் இயக்குனர் தன்னிடமுள்ள கருத்துக்களை திரைப்படம் மூலம் அனைவரும் பார்க்கும்படி செய்ய முடியும்.
  இதனால் திருட்டு விசிடி ஒழிக்கப்பட்டு நல்ல தெளிவான கம்பெனி விசிடிகள் மூலம் படம் பார்ப்பதால் வாடிக்கையாளர்களின் கண்களும் பாதுகாக்கப்படும் என்பது மட்டும் உறுதி.