'நீ இல்லாத இடமேயில்லை...
நீதானா இந்த குடிகார சமூகத்தின் எல்லை...
குவாட்டர் பாட்டிலே...'
நீதானா இந்த குடிகார சமூகத்தின் எல்லை...
குவாட்டர் பாட்டிலே...'
சுகாதாரகேட்டினை பேணுவோம் எப்படி ...? அரசே இதை செய்கிறது... பல குடிமகன்களை உருவாக்கிய பெருமை அரசுக்கே சேரும்.. இந்த குடிமகன்களால் அவர்களுடைய குடும்பத்திற்க்கு மட்டுமில்லை மனித இனத்திற்கே கேடு... இவர்கலால் மாசு படும் இடங்களில் இன்று கோயில், சர்ச், மசூதி முதற்கொண்டு பஸ்ஸ்டாண்டு, பொதுக்கழிபறை, மற்றும் பள்ளிக்கல்லூரிகள் , வணிக வளாகங்கள், முட்டு சந்துக்களை கூட விடாமல்
எதிர்கால சந்ததியினரின் சுகாதரத்திற்க்கு கேடு விளைவிப்பதில் அரசுக்கும், வெகுஜன குடிமகன்களுக்கும் தான் எவ்வளவு போட்டி பார்த்தீர்களா...? எதிர்கால சந்ததியினர் என்பவர் வேற்றுகிரகவாசியா? என்ன.. அந்த எண்ணத்தில்தான் இத்தகைய குரூர எண்ணம் கொண்டவர்கள் இதன் மாதிரி நடந்துகொள்கின்றனர். சட்டம் கடுமையாக்கப்பட்டால் தவிர இதற்கு விடிவு காலம் என்பதில்லை, வருங்கால சந்ததியினருக்கு இவர்கள் என்ன மிச்சம் வைக்கபோகிறார்கள்.. அவர்களுக்கு இந்த பூமி சொந்தமில்லையா.? சற்று ஆழ்ந்து யோசித்தால் இந்த தேசம் எவ்வளவு விஷமாகி போய்கொண்டிருக்கிறது என்பது தெளிவாக புரியும். இன்னும் 10 அல்லது 15 வருடங்களில் நம் மண்ணின் வளமை முழுதும் கெட்டுவிடும்.. பின்பு நாம் அனைவரும் திண்டாடி திரிய வேண்டியதுதான், இப்பவே எங்கு தோண்டினாலும் கண்ணாடி சிதறல்களும், பிளாஸ்டிக் கழிவுகள்தான் கிடைக்கிறது. ஆற்றில் மணல் அள்ளினாலும் அந்த மணல் சுத்தமானதாக இல்லை, இதுவே மனித இனத்தின் மாபெரும் வீழ்ச்சியின் அடிகோளாக அமையபோகிறது.. தண்ணீரும் ,காற்றும் மாசுபட்டு போன நிலையில், கைவசமாக இருப்பது இந்த மண் அல்லவா...? அதை பேணிக்காப்பது நம் கடமை அல்லவா...
நல்ல வளம் கொண்ட நாடு, மூலிகைவனம் கொண்ட நாடு , நல்ல பல அரிய காடுகளை கொண்ட நம் நாடு , இனி சுருட்டினவரை லாபம் என்ற நோக்கில் எதிர் காலத்தை கேள்விக்குறியாக்கிய நமது அரசாங்கத்தை குறை சொல்வதைத்தவிர வேறு நாம் என்ன செய்ய இயலும், காப்பவனே கள்ளனாகி விட்ட நிலையில் இதுவரை ஆண்ட அரசாங்கத்திற்க்கு மன்னிப்பே கிடையாது. என்பதை மட்டுமே இதன் மூலம் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்....

சீரழிக்கின்றனர், மேலும் காவலாளி இல்லாத நர்சரி பார்க் வரையிலும், அதையும் தாண்டி சுற்றுலாத்தலங்கள், நீர் நிலைகள், நீர்வீழ்ச்சி, கண்மாய், ஏரி குளம், மதகு, விவசாய நிலங்கள், பாலங்களின், போன்ற இடங்களில் குடிமகன்களின் கோரத்தாண்டவம் அவ்வள்வு இடங்களிலும் மது பாட்டில்களை உடைத்து எறிந்திருக்கிறார்கள்... இந்த இடங்களில் வெறும்கால்வைத்து எந்த வேலைகளையும் செய்யவிடாமல் மிகப்பெரிய பாதகத்தை செய்துவிட்டார்கள்.
உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழித் தமிழா!
-விஸ்வாமித்திரன்