நான் சாதாரண மனிதன்

  ஆம் ஆத்மி வளர்ச்சிக்கு காரணம்  பாஜக - காங்கிரஸ்
மத்தியில் ஆளும் பாஜகவும் சரி, ஆண்ட காங்கிரசும் இந்தியாவின் தலைநகர் டில்லியை தக்க வைக்க பெரும் போராட்டம் நடத்த வேண்டியதிருந்தது. அதிலும் காங்கிரஸ் பல முறை முதல்வர் பதவியை அனுபவித்த கட்சியாகும். போராடியும் தோற்றதற்கு அவர்களே காரணம்.
  
எந்தவொரு கட்சியும் மக்களின் நலனில் அக்கறை செலுத்தியிருந்தால் அதிகம் போராட வேண்டியதில்லை. பாஜகவும் ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகியும் எந்தவித திட்டமும் நிறைவேற்ற வில்லை. பிரதமர் நரேந்திர மோடியும் பாதிக்கு மேல் வெளிசாடு சுற்றுப் பயணத்திலேயே இருந்து விட்டார். பன்னாட்டு வர்த்தகம் தேவைதான் ஆனால் இன்னும் 4 ஆண்டுகள் உள்ளனவே.
  கடந்த டில்லி சட்டசபை தேர்தலில் பாஜக 31 தொகுதிகளை கைப்பற்றியும் ஆட்சி அமைக்கவில்லை. காரணம் ஏதேதோ கூறினாலும் அடுத்த தனிக்கட்சியான ஆம் ஆத்மி கட்சியை ஆட்சி அமைக்கவிட்டிருக்கலாமே, பாஜக ஒருபுறம், அதரவு கொடுத்த காங்கிரஸ் ஒருபுறம் அர்விந்த் கேஜ்ரிவாலை நிம்மதியாக இருக்க விடவில்லையே. அவர் செய்தது காங்கிரசார் மீது வழக்கு தொடர்ந்தது. தவறு இல்லை எனில் நீதிமன்றத்தில் சந்தித்திருக்கலாம். அதை விட்டு இப்போதல்ல எப்போதும் காங்கிரஸ் இது போன்ற செயலை செய்து செய்துள்ளது என்பதை மக்கள் மனதில் மீண்டும் நிலை நிறுத்தியது. ஆம் ஆத்மிக்கு 5 ஆண்டுகள் ஆட்சியில் அமர இரு கட்சிகளும் விட்டிருந்தால் வாக்காளர்களே அடுத்தமுறை வாய்ப்பு கொடுத்திருக்க மாட்டார்கள்.
    பலமுறை முதல்வராக இருந்த லீலா தீட்சித்தை காங்கிரஸ் மீண்டும் முன் நிறுத்தியதும் பாஜகவில் இணைந்த உடனேயே முதல்வர் வேட்பாளராக கிரண்Nபுடியை நிறுத்தியதும் இரு கட்சிகளும் கடந்த சட்ட மன்றத்தேர்தலில் படு தோல்வி அடைய வைத்தது.
  இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு ஒரு மாநிலக் கட்சியை இந்த அளவிற்கு 70க்கு 67 தொகுதிகளை வெற்றி பெறச் செய்துள்ளது இதுவே முதல் முறை, காரணம் கடந்த முறை ஆம் ஆத்மி அறிவித்த செயல் திட்டங்கள் டில்லி மக்களை கவர்ந்தது தான்.
     இலவச திட்டங்கள் இல்லாமல் விலைவாசியை குறைத்து வேலைவாய்ப்பை பெருக்கவும், இளைஞர், பெண்கள் நலனை கருத்தில் கொண்டது தான் டெல்லி மக்களை மட்டுமல்லாது இந்தியாவையே தன் பக்கம் ஈர்த்துள்ளார் கேஜ்ரிவால். இதையே இந்தியா மொத்தம் செயல்படுத்தினால் பல மாநிலங்களை ஆம் ஆத்மி கைப்பற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

  • ஊழல் ஒழிப்போம் என்பது கொள்கை. அதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது என்பதை 67ஃ70 நிருபித்துள்ளது.
  • மேலும் படித்த மக்களின் மனதின் பிரதிபலிப்பாகதான் டெல்லி சட்டமன்ற தேர்தலின் வெற்றி வெளிப்பட்டுள்ளது.
  • முன்னேற்றத்தின், மாற்றங்களுக்காக மக்கள் முனைப்புடன் உள்ளனர்.
  • பிரதமர் நரேந்திர மோடியின் மீது மக்கள் வைத்திருந்த எதிர்பார்ப்பு, இந்த தேசம் இதுவரை காங்கிரஸ்க்கு அடிமையாகி இருந்த வேளையில் தேசத்தின் முன்னேற்றமாக நினைத்து மோடியை தேர்வு செய்த மக்களுக்கு தற்போதைய பாஜக வின் நிலை ஏமாற்றத்தை கொடுத்ததின் விளைவே!  ஆம் ஆத்மியின் வெற்றி!
 மாற்றம் ஒன்றே எழுச்சியின் அடையாளம். அதை ஆரம்பத்திலே துவங்கிய ஆம் ஆத்மி கட்சியின் அடுத்த அறிவிப்பு, 'அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியிலே படிக்க வேண்டும்..... காலம் பதில் சொல்லட்டும்...
Previous
Next Post »