துறைமுக நகரத்தை தூய்மைப்படுத்தும் எஸ்.பி

  
தூத்துக்குடி மாவட்டத்தின் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக உள்ள திரு. மா. துரை அவர்கள் பொறுப்பேற்ற நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் மாவட்டத்தில் நடைபெறுகின்ற சமூக விரோதிகளின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடவடிக்கை எடுத்து வருகிறார். தூத்துக்குடியில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. ஸ்பிக், ஸ்டெர்லைட், டாக், அனல் மின்நிலையம், ஷிப்பிங் கம்பெனி மற்றும் சிறு சிறு தொழிற்சாலைகள் பல உள்ளன.
    இங்கு பணி புரிவதற்காக வெளி மாநிலங்களிலிருந்து ஏஜெண்டுகள் மூலமாக பல குழுக்களாக இங்கு வேலை செய்வதற்கு வருகிறார்கள். அப்படி வருகின்ற பல நபர்களில் சில சமூக விரோதிகளும் இருக்கிறார்கள். இவர்கள் இங்கு தங்கிக் கொணிடு சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுகின்றார்கள். இங்கு நடக்கின்ற கொலை, கொள்ளை, வழிப்பறி, கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம் ஆகிய சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் இரவு, பகல் பாராமல் கண்காணித்து துரித நடவடிக்கை எடுத்து வருகிறார். தற்போது நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் எந்தவொரு அசம்பாவிதம் நடைபெறாமல் நடவடிக்கை எடுத்தார்.
   போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்த போது பொதுமக்கள் சிரமமின்றி அவரவர் கிராமங்களுக்கு சென்று வர போக்குவரத்தை செயல்பட வைத்து தானே முன்னின்று நடவடிக்கை எடுத்தார். அரசியல் கட்சியினர்கள் நடத்துகின்ற பொதுக் கூட்டம், போராட்டம் போன்றவற்றிற்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கிறார். மாணவ, மாணவிகள் பயமின்றி பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகிறார்கள். அதே சமயத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஈவ்டீசிங் பண்ணுகிறவர்களை எஸ்பியின் ஆலோசனை படி மகளிர் காவல் துறையினர் மப்டியில் கண்காணித்து வருகிறார்கள். இவரின் துரித நடவடிக்கையைக் கண்டு பொதுமக்கள் பாராட்டுகிறார்கள். தூத்துக்குடியின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் விதத்தில் சிக்னல்களை திறம்பட செயல் படுத்தி வருகிறார்.
    தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகளையும் கயை எடுத்து துரித நடவடிக்கை எடுக்கிறார். இது காவல்துறை அதிகாரிகளின் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயத்தில் திறம்பட செயல்படுகின்ற காவல்துறை ஊழியர்களை பாராட்டி உற்சாகப்படுத்தும் விதமாக முதல்வரின் பார்வைக்கு எடுத்துச் சென்று விருது மற்றும் பதவி உயர்வு வழங்க ஏற்பாடு செய்கிறார். கறை படியாத பத்தரை மாற்றுத் தங்கமாக விளங்குகிறார். இவர் எடுக்கின்ற ஒவ்வொரு நடவடிக்கைகளைக் கண்டு அரசியல் கட்சியினரும், காவல்துறை ஊழியர்களும் அச்ச உணர்வில் இருக்கிறார்கள்.
   பொதுமக்கள் தங்களுடைய எந்த  கோரிக்கை ஆனாலும் தன்னை எந்த நேரத்திலம் சந்தித்து தங்களுடைய குறைகளை எடுத்துக் கூறலாம் என்று கூறியுள்ளார். ஆளும் கட்சி, எதிர் கட்சி வேறுபாடு இல்லாமல் கொடுக்கின்ற மனுக்களைப் பரிசீலித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார். இவரது அதிரடி நடவடிக்கையைக் கண்டு பொதுமக்களும், தொழிலதிபர்களும், சிறு, குறு வியாபாரிகளும், விவசாய பெருங்குடி மக்களும், மீனவ சமுதாய மக்களும் தூத்துக்குடியை அமைதி பூங்காவாக மாற்றியதைக் கண்டு பெருமிதம் கொள்கின்றனர்.
Previous
Next Post »