
தலைவலிக்கிறது என்றால் உடனே நாம் ஐயோ!, கடவுளே தலைவலிக்கிறதே என்கிறோம். வலி மேலும் அதிகரிக்கிறது. நாம் கடவுளை வசைபாடுகிறோம். கடவுள் தலைவலியை கொடுத்தால் அல்லவா, கடவுளே தலைவலிக்கிறது என்று கூப்பாடு போட்டவுடன் தலைவலி நீங்கும். நமது செயல்பாடுகளினால் தான் தலைவலிக்கிறது. இதற்கு கடவுள் என்ன செய்வார். தலைவலிக்கு நீங்கள் எழுந்து நடத்து உங்களது பணிகளை செய்தால், உங்கள் தலைவலியை புறக்கணித்தால் அது அகல்கிறது. இதைபோலவே பெரிய விஷயங்களிலும் ஏன் சாத்தியமாகாது.
உங்களைப்பற்றி எப்படி நினைக்கிறீர்களோ அப்படி ஆகிறீர்கள் என்று கூறப்படுகிறது. ஒன்றைப்பற்றி தொடர்ந்து சிந்திக்கும் போது அது வலுப்பெறுகிறது. ஒரு பழக்கத்தை விதைத்தால் ஒரு நல்லொழுக்கத்தை அறுவடை செய்கிறீர்கள்.
கடவுள் நம் வாழ்க்கையில் குறுக்கிடுவதில்லை என்பது ஆன்மீக உண்மை. அவர் விளக்கின் ஒளியால் நான் என் வழியை கண்டறியலாம் என்பது போன்று அவர் அங்கிருக்கிறார் அவ்வளவு தான். நான் எழுதலாம், அழகான தையல் பூவேலை செய்யலாம், தங்க வேலை செய்யலாம். என்னால் எதுவும் முடியும் அவரின் பிரசன்னத்தினால் அவ்வளவுதான். அவர் கடவுள் ஒருபோதும் அதை செய், இதை செய் என்றெல்லாம் சொல்வதில்லை.
விதியின் பெயரில் கடவுள் கூறினார் கட்டளைகள் உள்ளன என்று கடவுள் ஒருபோதும் எதையும் கூறவில்லை, ஆணையிடவுமில்லை.
கடவுள் நமக்கு அறிவையும், மனோபலத்தையும் அளித்தார். எதை எப்படி செய்யவேண்டும் என சரியாக வழிகாட்ட அறிவையும், அதை செய்வதற்கான மனோபலத்தை(சக்தி) அளிக்க இதயத்தையும் அளித்தார்.
நீங்கள் எதை கொடுக்கிறீர்களோ அதுதான் உங்களிடம் உள்ளது.
உங்களுக்கு தேவையான இரு கருவிகளை அளித்தேன். என்னிடமிருந்து வேறென்ன வேண்டும்?. என்பதோடு இவ்விதமாகத்தான் மனிதர்கள் மற்ற படைப்புகளிலிருந்து வேறுபடுத்தியுள்ளேன் என கடவுள் கூறினார். இதுவெ மனிதர்களின் தனிச்சிறப்பு.