நேர்மையின் விலை என்ன?

நேர்மையின் விலை என்ன?
       வளமான தமிழ்நாடு கொலைக்களமாக மாற யார்காரணம். இந்த அரசியல், சாதிய கொலைகள் நடபெற யார் காரணம். திராவிட கட்சிகளின் மிகப்பெரிய முயற்சியால் ஆட்சி அதிகாரத்தை பெற்றவுடன், திராவிட கட்சிகள் பெற்ற ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள நம்மை (பொதுமக்கள்) அவர்கள் சீரளித்துவிட்டனர், நாம் நமது சுயநலத்திற்காக அவர்களை தடம்புரள செய்துவிட்டோம்.
   நல்ல சிந்தனையும் நல்ல நோக்கமும். நம்அனைவரது சுயநலத்தால் நமது அனைத்து தகுதிகளும், சிறப்புகளும் சின்னா பின்னமாகி விட்டது... இன்று திராவிட கட்சிகளை குறை சொல்லும் நாம், ஏன் நல்லகன்னுவை மறந்துவிட்டோம்.. இன்றும் கக்கனையும், காமராஜையும் வாய்கிழிய புகழும் நாம் ஏன் நல்லக்கண்ணு போன்ற நல்ல தலைவர்களை தெருவில் விட்டோம் எல்லாம் நமது சுயநலமே.
   ஆண்டவர்களின் மோசமான நடத்தைக்கும், ஆட்சியில் இருப்பவர்களின் தவறானபோக்குக்கும் நாம் தான் காரணம். நாம் செய்யும் குற்றங்களில் இருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள நமக்கு அரசியல்வாதிகள் தேவைப்படுகின்றனர், பின்பு அவர்கள குற்றம்செய்தால் மட்டும் ஊழல்வாதிகள் என்று திரும்பவும் நாமே அவர்களை குற்றம் சொல்லுகிறோம். ஒரு பந்த் நடந்தால் ஒரு லிட்டர் பாலின் விலை காலையில் ஒரு விலை, மாலையில் ஒரு விலையாகவும் விற்க்கப்படுகிறது, பச்சிளங்குழந்தைகளின் உயிர் ஆதரம் பால் அந்த பாலையே நாம் அரசியலாக்குகிறோம். பேரூந்து ஸ்ட்ரைக் என்றால் வாடகை வாகனங்களின் கட்டனம் நம் சொத்தைவித்தாத்தான் வீடுபோய் சேரமுடியும் என்ற நிலையாகிவிட்டது, இதுவெல்லாம் யார் குற்றம்.? 
    நமது நேர்மை எங்கே ?  இன்றைக்கு நீதிபதிகள் கூட தாக்கப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது அவர்களே தங்கள் பாதுக்காப்பு கருதி துப்பாக்கி கேட்க்கும் அளவிற்கு நாடு சென்றுள்ளது.   ஆகவே  இப்படிபட்ட தலைவர்களை உருவாக்கிய நமக்கு ஏது நேர்மை...? நமக்கென்ன தண்டனை...
நமக்கெல்லாம் தண்டனை வழங்க வேண்டும் ஒரு நீதிபதி.... 
Previous
Next Post »
Post a Comment
Thanks for your comment