உலக மகளிர் தினம் ஓர் சிறப்பு பார்வை

ஆதிகாலம் முதல் பெண்கள் உலகத்தின் கண்கள்தான்.

நீரின்றி அமையாது உலகு!. அதுபோல் அவள் இன்றி இயங்காது உலகு.
       பெண்களின் பெருமையையும், வீரத்தையும், பலத்தையும், நன்கு அறிந்த மனிதன் பெண்களை விவசாயதிற்கு மாடுகளை போல  பயன்படுத்தினான், பின்பு பிள்ளை பெற்றெடுக்கும் கருவியாக நினைத்தான், போகப்பொருளாக, அடிமைகளாக, ஏலப்பொருளாக, முழுநேர வேலைக்காரியாக, அம்மம்மா எழுத்துக்களில் எழுதமாளாது. 
    இப்படி பெண்களை ஆண்வர்க்கம் பல ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இன்னல்களை அனுபவித்து வந்த நிலையில் கி பி. 1789 ம் ஆண்டு பெண்கள் தங்களுக்கு சம உரிமைக்கான போராட்டங்களை நடத்த தொடங்கினார்கள். ஆம், பிரெஞ்சு புரட்சியின் போது 1789 ஜூன் 14 ஆம் நாள் மிகப்பெரியப்புரட்சி கிளர்ச்சியாக வெளிப்பட்டது. அதில் பெண்கள் வைத்தக்கோரிக்கைகள்
   1. அடிமைத்தனம் நீக்குதல்,
   2. 8 மணி நேர வேலை,
   3.வாக்குரிமை.
 இந்த போராட்டம் பல ஆண்டுகள் நீடித்து முடிவில் 1848 மார்ச் 8 ஆம் நாள் பிரான்ஸின் இரண்டாம் குடியரசை நிறுவிய லூயிஸ்பிளங் என்ற அரசன் பெண்களுக்கு வாக்குரிமை அளித்து அரசவை ஆலோசனைக்குழுவில் இடமளித்தார்.
    அதைத்தொடர்ந்து பெண்களுக்கு சம உரிமைகள் உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் பரவ தொடங்கியது, ஆனலும் இந்தியாவில் பெண்களுக்கான சம உரிமை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்தது, ஏனெனில் பல சமய கோட்பாடுகள் மற்றும் மூடப்பழக்கவழக்கங்களால் முடக்கப்பட்டு கிடந்த பெண் சமூகத்திற்கு அதிகபட்சமாக கேடுவிளைவிக்கும் கொடுரமான  உடன்கட்டை ஏறுதல், கைம்பெண் மறுமணம் மறுப்பு, தேவதாசி முறை, போன்ற நடைமுறைகளால் பாதிக்கப்பட்டு வந்த பெண்ணினத்திற்க்கு சுதந்திரப்போராட்டக்காலத் தலைவரான  மதிப்பிற்க்குரிய ராஜராம்மோகன்ராய் என்பவரால் உடன்கட்டை ஏறுதல் ஒழிக்கப்பட்டது, கைம்பெண்மறுமணம் ஊக்குவிக்கப்பட்டது. இதற்;க்கு திராவிடத்தின் தலைமகன் தந்தை பெரியார் முன்மாதிரியாக திகழ்ந்தார். இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் தேவதாசி முறையை அடியோடு ஒழிக்கப்போராடினார்கள்.
     இப்படி பெண்களின் உரிமைக்கான பல விதமான பரிணாமவளர்ச்சியில் டாக்டர் கலைஞர் கருணாநிதி பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கிடைப்பதற்கான சட்டத்தை 1989 ல், அமல்படுத்தினார்.  இந்தியாவின் முதல் பெண் பிரதமரும் மக்களால் இரும்பு பெண்மணி என அழைக்கப்பட்ட இந்திரா காந்தி பிரதமராக பல காலம் ஆட்சிசெய்தபோதிலிருந்தும் இன்றுவரை பெண்களுக்கான 33 சதவித இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படாமல் இருந்துவருவது சோகத்திற்க்கானது...
   இன்றைய பாரத பிரதமர் மோடி அவர்களின் ஆட்சிக்காலத்திலாவது இந்த மசோதா நிறைவேற்றப்படவேண்டும் என்பது இந்திய பெண்கள் அனைவரது ஒட்டுமொத்த எதிர்ப்பார்ப்பாகும். நம் தமிழகத்தைப்பொறுத்தவரை ஆட்சிபீடத்தில் அமர்ந்து ஆட்சிசெய்த, ஆட்சி செய்துகொண்டிருக்கின்ற அனைத்து தலைவர்களும் பெண்களுக்கு பலப்பல நண்மைகளையும் உயர்வுகளையும் அளித்து மதித்து நடந்துவந்தனர் என்பது மிகச்சிறப்பான தமிழகத்தின் தன்னிகரில்லா தன்மையாகும்.
Previous
Next Post »
Post a Comment
Thanks for your comment