சுகாதாரம்

சுத்தம் சோறுபோடும்! பழமொழி!
பழைய மொழியாகிவிட்டது. மாற்றம் தனி மனிதனின் வாழ்க்கையில் இருந்து துவங்க வேண்டும்! அப்போதுதான் எந்த மாற்றமும் மகத்துவம்  பெறும். அந்த வகையில் தனி மனித மாற்றம் ஏற்பட வேண்டும். சுகாதாரத்தை பொறுத்தவரையில்...

  சுகாதாரம் பேணுவதில் தமி மனிதன் நடத்தை சரியான திசையில் செயல்பட்டால் தான் தூய்மை இந்தியா திட்டம் நிறைவேறும். மக்கள் கூடும் இடங்களில் (சந்தை, பேருந்து  நிலையம் பொதுக் கழிப்பிடம் போன்ற) ஒழுங்கு முறை கடைபிடிக்கப்  வேண்டும்.

  தெருக்களில் அனாவசியமாக போடப்படும் குப்பைகள் ஒருபுறம்,  வீதிகளில் அங்காடிகள் இரவில் மூடப்படும் போது தெருவில் தேங்காய் உடைப்பது பூசணிக்காய் தடியங்காய் சூடம் ஏற்றி உடைப்பது போன்ற காரணங்களால் தெருக்கள் குப்பை  கூளமாக காட்சி அளிக்கிறது. மேலும் குப்பை தொட்டியை பயன்படுத்தாமல் அசட்டையாக இருப்பது. கழிவு நீர் குழாய்களை செப்பணியிடாமல் இருப்பதும் மிக கேவலமான செயல்கள்.
 கோழி, ஆடு, இறைச்சிக் கடைகளில் கழிவுகளை முறையாக கையாளாமல் அதை அந்த இடத்திலேயே கொட்டிவிடுவதும், தாவர கழிவுகளையும், மருத்துவ கழிவுகளையும், பிளாஸ்டிக்,பேப்பர் கழிவுகளையும் அங்கங்கே தன்
  வேலை முடிந்த வுடன் போட்டுவிட்டு போவதாலும் இன்று நாடு நகரமெல்லாம்  எங்கு காணினும் குப்பைமயம்!

இப்படி தனக்கு தானே தீங்கு விளைவித்துக் கொண்டும் தொற்று நோய்களுக்கான விஷக் கிருமிகளை உருவாக்கி கொண்டும் மக்களே தானாகவே பாதிப்புக்கு உள்ளாகி விடுவதுதான் இன்றைய நாகரிக  விட்டது.

   பொறுப்பற்றவர்களின் பொறுப்பற்ற செயல்களால் இன்று சுகாதாரம் பாதிக்கப்பட்டு மக்கள் அனைவரும் பாதிப்புக்கு உள்ளாகி வருவது சகஜமாகி விட்டது.

  எத்தனை அறிவியல் யுகமகிப் போனாலும், அரசு எத்தனை நடவடிக்கை எடுத்தாலும்  மக்கள் தாமாக தூய்மையையும் சுகதரதையும் கடைபிடிக்க மறுத்தல் இந்த பிரச்னை தீர்ந்த பாடில்லை.
காலப் போக்கில் சுயநலமே கதி! என்ற மனநிலையை மக்கள் கடைபிடிப்பதால் ஒருநாள்  இந்த தமிழ் பூமியில் விஷமாகிவிடும்.

   அப்போது உலக நாடுகளின் பார்வையில் கிருமிகளின் நாடக பெயரெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. விழிப்புணர்வு இயக்கங்களும் அரசின் கட்டுத்திட்டான செயல்படுகும் தனிமனித மாற்றத்தை கொண்டு வந்தால் மட்டுமே சுகாதரமான நோய்நோடியற்ற  வாழ்க்கை கிடைக்கும். இல்லையெனில் அருமையான வடை பாயச சாப்பாட்டுக்கு அருகில் மலம் வழிந்தோடும் நிலையில் தான் வாழவேண்டும்! கொடுமை தான் !
Previous
Next Post »
Post a Comment
Thanks for your comment