பெற்றோர் முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வுச்சட்டம்.

இன்றைய இளையத்தலைமுறையினர் நாளைய பெற்றோர்களாகவும் முதியோர்களாகவும் மாறுவதே காலத்தின் கட்டாயம் இது இயற்கையின் நீதி.
ஆகவே பெற்றோர்களையும், முதியோர்களையும் மதித்து அன்பு செலுத்தி அவர்களின் தேவையை உணர்ந்து பாதுகாக்கப்படவேண்டியவர்கள். இதை செய்யத்தவறும் மனித தன்மையற்றவர்களுக்காக மத்திய அரசு 2007 ல், இந்த சிறப்பு சட்டத்தை வகுத்தது . இந்த சிறப்புச்சட்டத்தின் கீழ் 2009 ஆண்டு விதிமுறைகள் வகுக்கப்பட்டது. இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சட்டம் என்ன சொல்கிறது...
1. ஒவ்வொரு காவல் நிலையமும் தனது எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியாக வசிக்கும் முதியோர்கள் குறித்த விவரங்களை சேகரித்து பதிவேட்டில் பராமரிக்கப்படவேன்டும்.
2. ஒவ்வொரு மாதமும் அந்தந்த காவல் நிலைய அதிகாரி ஒரு சமூக ஆர்வலருடன் சேர்ந்து தனது எல்லக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் முதியவர்களை சந்தித்து அவரது நிலைமைகளை ஆய்வு செய்யவேன்டும்.
3. மாவட்டந்தோறும் அரசு முதியோர் இல்லங்களை ஏற்ப்படுத்திடவேண்டும்.
4. ஆதரவற்ற முதியவர்களை இந்த இல்லத்தில் சேர்த்துவிடவேண்டும்.
5. முதியவர்கள் , கைவிடப்பட்ட பெற்றோர்களின் பிரச்சனைகள் குறித்து மாவட்ட சமூக நலவாரியம் விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
6. இதற்கென நியமிக்கப்படும் பாதுகாப்பு அதிகாரி முதியோர்களின் பிரச்சனைகளூக்கு தீர்வுக்காணவேண்டும்.
7. முதியவர்கள் தரும் புகார்களின் மீது காவல்துறையினர் தாமதமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறெல்லாம் அந்தச்சிறப்புச் சட்டத்தில் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. முதியவர்களுக்கு எதிராக பெருகிவரும் குற்றங்களை தடுக்க இந்தச்சட்டம் பெரும் உதவியாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை, ஆனால் இந்தச்சட்டம் குறித்த விழிப்புணர்வு அரசு அதிகாரிகளிடமும் இல்லை, பொதுமக்களிடமும் இல்லை. முதியவர்கள் நமது சமூகத்தின் பொக்கிசங்கள், இளைய தலைமுறையினருக்கு வழிக்காட்டும் ஆசான்கள். அவர்களை பாதுக்காப்பதும் பராமறிப்பதும் நமது தலையாய கடமை.
  மனித இனம் சிறப்பான எதிர்காலத்தை அமைத்திட நம் பெற்றோர்களையும், முதியோர்களையும் பாதுகாப்பது காலத்தின் கட்டாயாம், இதனை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து வழி நடக்கவேண்டும்.
Previous
Next Post »
Post a Comment
Thanks for your comment