அறிவுரைகள் அல்ல... யோசனைகள்.....

என் அன்பு சகோதர சகோதரிகளுக்கு..........
  • ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்றுபேரையாவது பாராட்டு.
  • மாதம் ஒரு முறையாவது சூரிய உதயத்தைப்பார்.
  • நன்றி, தயவுசெய்து-இந்த வார்த்தைகளை முடிந்தவரை அதிகம் உபயோகி.
  • உன் வசதிக்கும் தகுதிக்கும் உட்பட்டு வாழக் கற்றுக்கொள்.
  • உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறாயோ, அப்படியே நீயும் மற்றவர்களை நடத்து.
  • ரகசியங்களைக் காப்பாற்று.
  • புதிய நண்பர்களைத் தேடிக்கொள்; பழைய நண்பர்களை மறந்துவிடாதே.
  • தொழில் ரகசியங்களைக் கற்பதில் நேரத்தை வீணடிக்காமல் தொழிலைக் கற்றுக் கொள்.
  • உன் தவற்றை தயங்காமல் ஒத்துக்கொள்.
  • தைரியமாக இரு.உண்மையில் அவ்வாறு இருக்க முடியாவிட்டாலும், அப்படித் தோற்றம் அளி
  • ஒரு போது மற்றவரை ஏமாற்றாதே.
  • கவனிக்கக் கற்றுக்கொள்.சந்தர்ப்பங்கள் அமைதியாக சில நேரம் தான் வரும்.
  • கோபமாக இருக்கும்போது ஒரு முடிவும் எடுக்காதே.
  • உன் தோற்றத்தில் எப்போதும் கவனம் இருக்கட்டும்.
  • மேலதிகாரிகளையோ பெரியவர்களையோ சந்திக்க செல்லும்போது காரணத்துடனும் நம்பிக்கையுடனும் செல்.
  • ஒரு வேலை முடியுமுன் கூலி கொடுக்காதே.
  • வதந்தி,வம்பு பேசுவதைத் தவிர்.
  • போரில் வெற்றி பெற சண்டையில் விட்டுக்கொடு.
  • ஒரே சமயத்தில் நிறைய வேலைகளை ஒத்துக் கொள்ளாதே.பணிவாக மறுத்து விடுவதில் தவறில்லை.
  • வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக இருக்கும் என்று எதிர்பாராதே.
  • பொருட்கள் வாங்கும்போது சிறந்ததையே தேர்ந்தெடு.

 'எனக்குத் தெரியாது', மன்னிக்கவும்', என்பதை சொல்லத் தயங்காதே..!!
Previous
Next Post »