வறுமை

இது..!
பசிக்கின்ற வயிறுகளை...
தண்ணீரில்...
தாலாட்டும் தாய்..!

செல்வத்தை...
தொட நினைத்தும்
இன்றுவரை...
வறுமையை தான்டாத
வாசல்படி..!

ஏழை எனும்...
உயிரில்...
ஆசைகளை...
நீண்டகால ஏக்கங்களாக...
உறங்க வைக்கும்
தொட்டில்..!

பல அடுக்கு மாடிகளை...
தலைகுனிந்து...
பார்க்கவைத்து...
தன்னம்பிக்கையோடு
காயும் குடிசை..!

ஒரு ரூபாய் நாணயத்தை...
உதட்டோடு...
ஒட்டிப்பார்த்து மூச்சாக...
முத்தமிடும் காதல்..!

ஒவ்வொரு விடியலிலும்...
செத்துவிடும்...
நிலையினிலே...
முளைத்துகொண்டிருக்கும்...
விதைகள்..!

வியர்வையும்...
கண்ணீரும்...
நிரம்பி வழிகின்ற...
நிறைகுடம்..!

வாழ்நாளில்...
நிஜமானஆசைகளை
கணவாக காட்டும்...
கண்ணாடி..!

கசப்பான...
நினைவுகளும்...
கசந்துகொண்டிருக்கும்...
நிகழ்வுகளும்...
ஒன்றாக சங்கமித்து...
சங்கடத்தில் மூழ்கடிக்கும்...
சமுத்திரம்..!

வறுமை..!
இதற்க்கு கொடுக்கபட்ட
அடையாள நிறம் சிவப்பு!
ஆனால்..!
இங்கே...
சிவப்பு கம்பள வரவேற்போ..?
செல்வத்திற்க்கு..!

இந்த உலகத்தில்...
மாற்றம் ஒன்றே...
மாறாததாம்..!
அப்படியானால்..!
இந்த வறுமை..!
எப்போது மாறும்..?

எதிர்வரும்...
ஒவ்வொரு நாளும்
ஏழைகளின் துயர்நீக்க...
வறுமை ஒழிப்பு நாளாக...
கடமையாக்கி...
கடைபிடிப்போம்..!
அன்பு நண்பர்களின்
ஆதரவை நாடும்...

Previous
Next Post »