அன்பே! அனைத்துமானது!


   இத்தகைய அரக்கர்கள் எத்தனைபேரை இந்த சமூகம் உருவாக்கியுள்ளது. இவர்கள் உருவில் மட்டும் மனிதர்களாக பிறந்தவர்கள். ஆனால் விலங்குகள் அவ்வாறில்லை. நாம் அவற்றிற்கு   நன்றியுடன் இருக்கவேண்டும், எப்படி ஒரு புலி தனது உணவிற்காக மட்டுமே பிற விலங்குகளை தாக்குகிறது, ஆனால் மனிதன் மட்டுமே தன் இன்பத்திற்காக அனைத்தையும் கொல்கிறான்.
   ஒரு மனிதன் அன்பை பெறுவதும்ஃஅன்பை வெளிப்படுத்துவதும் இல்லறவாழ்க்கையில் இருந்துதான் . ஒரு மனிதனின் முதல் கடமையும் பொறுப்பும் என்பது இந்த உலகத்திற்கு மனித இனம் தொடர வம்சவிருத்தி செய்வதுதான். இந்த கடமையின் வாயிலாக அவனிடம் அன்பு தானக (உள்ளிருக்கும் அன்பு) பிரவாகம் எடுக்கிறது, அன்பின் தொடர்சி தியாகம் (சேவை) , அன்பின்றி தியாகமில்லை, உங்கள் குழந்தையை நேசித்தாலன்றி அவனுக்காக ஏன் எதையும் தியாகம் செய்ய போகிறீர்கள் ? எந்த தாயும் தன் குழந்தைக்காக உணவின்றி, நீரின்றி இருப்பாள்.
ஆனால் அந்த அன்பு சந்நியாசியிடம் இருக்காது, அவர் தனக்கு அவசியமானவைப்பற்றி விவாதிப்பார். நீங்கள் வளம்பெற நான் உயிருடன் இருக்கவேண்டும் என போதிப்பார். அன்பும் தியாகமும் இன்றி ஆன்மீகம் இல்லை. அனைவரையும் நேசித்து அதன்பின் மெல்ல மெல்ல அன்பு உங்கள் குடும்ப எல்லையைத்தாண்டி பரவும், பரவசெய்யவேண்டும். ஆக அதுவே ஒரு குடும்ப அங்கதினாராக இருப்பதற்கானதேவை. இவ்வாறு நீங்கள் அன்பு செலுத்துபவர் என்பதிலிருந்து அன்பாகவே மாறமுடியும்.

    சர்க்கரை எப்படி அனைவருக்கும் இனிக்கிறதோ ! அதே போல அன்பும் அனைவருக்குமானது. அன்பு அனைவருக்குமானது எனவே அது அனைவருக்குள்ளும் இருக்கிறது அதுவே 'இறைவன்'. கடவுள்...
மனிதன் எதுவாக இருக்கவேண்டுமோ அதுவாக இருக்கவேண்டும்.....
கடவுள் அடிமைகளை விரும்புவதில்லை.
உண்மையான அன்பு என்றால் மனிதர்களுக்கு இன்னும் தெரியவில்லை, மனிதர்கள் பற்றுதலையும் பரஸ்பரம் சார்ந்திருத்தலையும் அன்பென நினைக்கிறார்கள்., அன்பு என்பது கடவுள் என்று நாம் வர்ணிக்கின்ற முழுமையான தெய்வீகத்தன்மையாகும் .கடவுள் என்றால் அன்பு , உள்ளுக்குள் தெய்வீகம் இருந்தால் நீங்கள் அன்பாக இருக்கவேண்டும் ஆனால் தன்னையே நேசிக்கும் திறன் கூட இல்லாதவர்களிடம் அன்பு (கடவுள்) குடியிருக்க சாத்தியமில்லை. ஆகவே தீயகுணம், கொடூர செயல்கள் அனைத்தையும் மனித இனத்தின் மேல் வெளிப்படுத்துகிறீர்கள்.
Previous
Next Post »
Post a Comment
Thanks for your comment