யாரிடம் சொல்லி அழுவது..!

    
     அகில இந்திய கம்யூனிட் கட்சிகளும் மேற்குவங்க மக்களின் நலனுக்காவே போராடுவோம்!
ஆனால் தமிழக காங்கிரஸ் கட்சியும், தமிழக பாரதிய ஜனதா கட்சியம், தமிழக கம்யூனிஸ்ட் கட்சிகளும், தமிழக மக்களின் நலனில் அக்கறை காட்டாமல் டெல்லியின் தலைமைக்கு கூஜா தூக்கும் வேலைமட்டுமே செய்யும்!
   தமிழகத்தில் உள்ள அகில இந்திய கட்சிகள் மத்தியில் ஆட்சி செய்யும் தத்தமது கட்சிகளின் தமிழர் விரோத போக்கை கடைபிடித்தாலும், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயலில் ஈடுபட்டாலும் கண்டுக்கொள்ளவும் மாட்டார்கள். இவர்களுக்கு அப்போது மட்டுமே தேசியமும் மலரும், ஒருமைப்பாடு மலரும்!
   இன்று கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே இரண்டு அணைகள் கட்டமுடிவு செய்து ஆரம்ப கட்டவேலைகளை ஜரூராக தொடங்கிய நிலையில் இன்னுமும் தமிழக பாஜக அதை தடுக்கும் வகையில் எதையும் செய்யவில்லை.
   என்னவோ தெரியவில்லை தமிழர்களிடம் மட்டும் காணப்படும் இந்தக் கொள்கை அது அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும். இந்த காவிரியின் குறுக்கே அணைக்கட்டும் விவகாரத்தில் தமிழகத்தை ஆளும்கட்சிக்கூட மக்களின் போராட்டத்திற்கு தனது வெளிப்படையான ஆதரவை பதிவு செய்யாததும், கர்நாடக மாநில அரசை கண்;டித்து தன் எதிர்ப்பை பதிவு செய்யாததும் வருந்தத்தக்கது.
    இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் (தமிழகத்தைத் தவிர) தத்தம் மாநில பிரச்சனை என வந்து விட்டால் ஆளும்கட்சி எதிர்கட்சி வித்தியாசம் இல்லாமல்அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் திரண்டு தங்களது மாநிலத்தின் நலனுக்காக போராடும்!
  ஆனால் தமிழகத்தின் நிலை...............? யோசித்துப் பாருங்கள் !
அகில இந்திய காங்கிரஸ் கட்சி கேரளாவில் கேரள காங்கிரஸ் கட்சியாக கேரள மக்களின் நன்மை மட்டுமே கொள்கையாக செயல்படும். அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி. கர்நாடகாவில் கர்நாடக மாநில மக்களின் நலனில் மட்டுமே கவனம் செலுத்தும்!
Previous
Next Post »
Post a Comment
Thanks for your comment