மாநில அரசியல் ஒரு பார்வை

பெருமை மிக்க திருவரங்கம் தேர்தல்
    
   ஒரு காலத்தில் காங்கிரஸ் பெயரில் ஒரு கழுதையை நிறுத்தினாலும் அது வெற்றி பெறும் என்று சொன்னார்கள். அது உண்மையாகவும் இருந்தது. அப்படிப் பட்ட காங்கிரஸ் இப்போது என்ன நிலையில் உள்ளது? அதே நிலைமை இவர்களுக்கு ஏற்படாது என்பதற்கு என்ன நிச்சயம்? ஆளும் கட்சி முன்பெல்லாம் பல நேரங்களில் இடைத் தேர்தல்களில் தோற்றதுண்டு. திருவரங்கத்தில் ஆளும் கட்சி தோற்றால் அத்தொகுதி பழி வாங்கப் படும் என்ற கூற்று சரிதானா? 15 மாத காலத்தில் என்ன வகையில் மக்கள் பழி வாங்கப் பட்டிருப்பர்? மக்கள் செம்மறி ஆட்டுக் கூட்டமாக செயல் படுவது மிகவும் கவலைக்குரியது. இந்தத் தேர்தலும் இதன் முடிவுகளும் தமிழ் நாட்டை அகில இந்திய அளவில் தலை குனியச் செய்யும் வகையில் தமிழ் நாட்டுக்கு கெட்ட பெயர் தான் உண்டாக்கியிருக்கிறது என்பது தான் உண்மை. நமது மக்களாட்சியின் மாண்பு இது போன்ற முடிவுகளால் சிதைக்கப் படுகின்றது
   இடை தேர்தல்களில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவது, பணநாயகம் இதெல்லாம் இருக்கட்டும். அதிமுகவின் செயல்பாடுகள் இந்த தொகுதியில் எப்படி இருந்தது என்று ஆராய்ந்து பாருங்கள்.
      இன்னொரு கேள்வி இந்த தேர்தலில் திமுக பணம் கொடுக்கவே இல்லையா? அப்புறம் ஏன் பணம் கொடுத்ததை தடுக்க வந்த அதிமுக பிரமுகரை வெட்டினார்கள்? வழக்கு பதியப் பட்டு சிறையில் இருக்கிறார்கள். பணம் கொடுத்து வெற்றியை விலைக்கு வாங்கினார்கள் என்று சொல்லி ஆளுநர் உரையை புறக்கணித்த ஸ்டாலின் பணம் கொடுத்த திமுகவினரை (இரண்டு பெண்கள் வேறு) கட்சியை விட்டு நீக்கினாரா? அப்புறம் எதனை வைத்து அதிமுகவை மட்டும் குறை சொல்கிறார்கள்?
    அ.தி.மு.க வின் வெற்றியில் என்ன தெரிகிறது. தமிழ்நாட்டின் மற்ற அரசியல் கட்சிகளின் (தி.மு.க. நீங்கலாக) தரமற்றக் கொள்ளை – கட்சி என்பது என்ன? பல மனிதர்களின் கூட்டு அப்படிபார்க்கையில் அந்த மக்களை அறிவாளியாக்காமல், சிந்தனையற்றவர்களாகவே சித்தரிக்கிறதே!. பா.ஜ.க 5015 ஓட்டுகள், ஏன் இந்த நிலை ஒரு தொகுதியில் வெறும் ஓட்டுக்களை மட்டும் கொண்ட கட்சியா? இல்லை பாஜக கட்சியில் கட்சித்துரோகிகள் உள்ளனரா? இல்லை. அந்த கட்சியின் கூட்டணி கட்சிகளின் வாக்களர்கள் நிலையென்ன? பல கட்சிகளின் கூட்டணி ஓட்டு இவ்வளவு தானா? மற்றபடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1552 ஓட்டுகளும், நோட்டா ஓட்டுகள் 1919. இதில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி 1167 ஓட்டுகளும் பெற்றிருந்தனர்.
   மொத்த பதிவான ஓட்டுகள் 2,21,173. அ.தி.மு.க ஓட்டுகள் 1,51,561 இங்கே கொடுமை என்னவென்றால் தேர்தலை புறக்கணித்த கட்சிகள், அவர்களின் வாக்குகளை குப்பையில் போட்டுவிட்டார்களா? இல்லை அவர்களுக்கு ஓட்டுகள் இல்லையா? தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளுக்கு எதிரணியினர் தங்கள் வாக்குகளை நோட்டாவில் பதிவிட்டிருக்கலாம், இல்லை சுயேட்சை வேட்பாளர்கக்கு வாக்களித்து அதிருப்தியை வெளிபடுத்திருக்கலாம். ஆனால் இங்கு மாற்றுக் கொள்கை கொண்ட கட்சியினரின் வாக்குகளை எங்கே? விலைபோய் விட்டாகளா?ஒருகட்சியின் கட்சியியை பிடிக்கவில்லை என்றால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தெரியாத மக்களாகவே இருக்கும் வரை ஆட்சியாளர்களை குறை சொல்ல வாக்காளர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. இதில் தெரியவருவது என்னவெனில் வாக்காளர்களுக்கு கொள்ளையும் இல்லை, கோட்பாடும் இல்லை எனவே திருவரங்கம் அ.தி.மு.க விற்க்கு கிடைத்த வெற்றி. அந்த தொகுதியில் நிரைவேற்றப் பட்ட அரசு பணிகளை பொருத்தது என எண்ணிக்கொள்வோம்.
  ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் நடப்பது என்பது நடப்பு உறுப்பினர் மரணமடைந்தாலோ அல்லது பதவியை துறந்தாலோ மட்டுமே இதுவரை நடந்துள்ளது. முதன் முறையாக அகில இந்தியா அளவிலேயே இப்போதுதான் திருவரங்கத்தில் நடந்துள்ள இடைத்தேர்தல் ஒரு சாதனை படைத்துள்ளது. உறுப்பினர் சட்ட ரீதியாக பதவி பறிக்கப்பட்டு தண்டனையும் பெற்று தண்டத் தொகையும் செலுத்த வேண்டும் என்று நீதி மன்ற தீர்ப்பை அடுத்து இப்படி ஒரு தேர்தல் நடந்துள்ளது. இங்கு நடந்த தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களில் ஒரு கணிசமான அளவினருக்கு இந்தக் காரணத்தால் தான் இந்தத் தேர்தல் என்று புரிந்து கொள்ளக் கூடிய அளவு திறன் படைத்தவர்கள் இல்லை என்பது மிகவும் வேதனைக்குரியது. ஊடகங்களோ இந்த தீர்ப்பால் மக்கள் அவர் மீது அனுதாபம் கொண்டுள்ளனர் என்கின்றன. அப்படியே அனுதாபம் ஏற்பட்டால் ஊடகங்கள் என்ன செய்ய வேண்டும்? மக்களே இது அனுதாபம் ஏற்படுத்தக் கூடிய செய்தி அல்ல என்பதனை வலியுறுத்த வேண்டாமா? கட்சியின் செல்வாக்கும், மக்களின் அனுதாபமும் இருக்கிறது என்றால் என்ன காரணத்துக்காக அனைத்து அமைச்சர்களும் முகாமிட்டு இவ்வளவு பணத்தினைக் கொட்ட வேண்டும்?
Previous
Next Post »