உன்னை அறிந்தால்........

  தாயின் கருவறையில் துவங்க வேண்டியது, ஆனால் அது நடைபெறுவது நமக்கு தெரிவதில்லை. எனவே 18 வயது பூர்த்தியான பின்பு ஆன்மீகம் தழுவலாம்!
     வாழ்க்கையின் பொறுப்புகளையும் கடமைகளையும், முடித்துவிட்டு ஆன்மீகத்திற்கு வருவது என்பது ஆன்மீகம் அல்ல. ஒருவன் அன்பையும், தியாகத்தையும் செயல்படுத்துவதுதான் ஆன்மீகம் ஆகும்! எல்லாவற்றையும் நீயே நிறைவேற்றிவிடுவாய் எனும்போது இறைவன் எதற்கு? அவனது உதவி எதற்கு?
    தன்மீது ஆளுமை பெற்றவர் என்பவர் குரு வாகிறார். நீங்கள் மற்றவர்களுக்கோ அல்லது ஒரு படைக்கோ அல்லது மக்களுக்கோ குரு அல்லஇ தன்மீது ஆளுமை பெற்றவர் என்பதால் தன் பணிக்கு ஒரு அதிகாரி, பொறுப்பு போன்றவை அல்லாமல் அனைத்திற்க்கும் குரு பொறுப்பாகிறார்.
   உலகின் அனைத்து உயிர்களும் லட்சியத்தை நோக்கி பரிணாம வளர்ச்சியடைகிறது. ஒரு கல்லினுள் கூட ஆன்மா உள்ளது. ஆன்மா அழிவற்றது, ஆன்மாவின் பயணம் லட்சியத்தை நோக்கியது.
    நீங்கள் உண்ணுகின்ற உப்பானது அல்லது எதுவாகினும் மனித அமைப்பினுள் செல்வதன் மூலம் பரிணாம வளர்ச்சியடைகின்றன. அதன் பின்னர் அவை புல்லின் உயிர் சக்தியாக வளர்ச்சியடைகிறது. பசுக்களால் உண்ணப்படுகின்றன. பிறகு பாலாக வெளிவந்து மீண்டும் மனிதனுக்குள் செல்கின்றன. இவையனைத்தும் எவ்வாறு என விளக்கம் உள்ளது. எனவே, பரிணாம வளர்ச்சியின் சரித்தித்தில் தற்போது மனித குலம் தான் இந்த வாழ்வின் வளர்ச்சிக் கிரகத்தில் மிக உயர்ந்த நிலையில் உள்ளது.  அரிது அரிது மானிடராய் பிறத்தல் அறிது என்பதன் உயர்வு இதிலிருந்து தெரிகிறது அல்லவா!
    இந்நிலையில் இறைவனோடு ஒன்றினைந்த வளர்ச்சி நிலை மனித குலமாகும். மனிதன் வேறு இறைவன் வேறில்லை. மனிதனிடம் உள்ள இறைவனை மனிதன் வெளிகாட்டுவதில்லை. அதற்கு மனிதம் அனுமதிப்பதில்லை, எனது இதயபூர்வமான உள்ளிருந்து வரும் ஆணைகளை முடிக்கும் வேலைக்காரனாக நம்மை நினைத்தால், நம் வேலையும், பொறுப்பும் விரைவில் முடிந்துவிடும். ஒளியை விரைவில் அடையலாம்!.
Previous
Next Post »